முதலமைச்சர் குறித்து முகநூலில் பதிவு: அவதூறு புகாரில் ஒருவர் சிறையில் அடைப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து முகநூலில் அவதூறு பதிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Advertisement

சமூகவலைதளங்களில், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு பரப்பப்பட்டு வருவதாக புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் அக்பர் பாட்ஷா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சீர்காழி அருகேயுள்ள நாராயணபுரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். 

விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட அந்த நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சதீஷ்குமாரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து, புழல் சிறையிலடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் டிடிவி தினகரன் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement