ரத்த தட்டணுக்கள் குறையாமல் காக்கும் சித்த மருத்துவம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெங்குக் காய்ச்சலால் ரத்த தட்டணுக்கள் குறையாமல் இருப்பது குறித்து சித்த மருத்துவர் வீரபாபு பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார்.


Advertisement

டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிலவேம்பு குடிநீர் அருந்த வேண்டும். இது ரத்த தட்டணுக்கள் வேகமாக குறைவதை தடுக்கும். ஆடாதொடை இலைப் பொடியை தேனில் கலந்து வைத்துக் கொண்டு, தினமும் காலை, இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு அரை ஸ்பூன் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் காலை மற்றும் மாலையில் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் காய்ச்சல் வராமல் தடுக்கலாம், ரத்த தட்டணுக்கள் வேகமாக குறையாமலும் இருக்கும். இதுமட்டுமின்றி நிலவேம்பு சாறு, பப்பாளி இலைச் சாறு, ஆடாதொடை இலைச் சாற்றை மூன்று வேளைகளிலும் அருந்தலாம். 

மேலும் அவர், நாட்டு மருந்து கடைகளில் நிலவேம்பு, ஆடாதொடை இலைப்பொடிகள் விற்கப்படுகின்றன என  அறிவுறுத்தியுள்ளார்.
 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement