அமேசான் நிறுவனத்தை ஏமாற்றி வித்தியாசமான முறையில் மோசடி செய்து வந்த நபர் டெல்லியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி ரோஹினி நகரைச் சேர்ந்தவர் சிவம் சோப்ரா. இவர் அமேசான் நிறுவனத்தில் 166 ஸ்மார்ட்ஃபோன்களை ஆர்டர் செய்து வாங்கிவிட்டு, பின் பார்சலில் வந்தது வெறும் கல் மட்டும் தான் என்று கூறி அதனை திருப்பி அனுப்பி உள்ளார். இந்த வித்யாசமான மோசடி மூலம் சோப்ரா 50 லட்சம் ரூபாய் வரையிலும் சம்பாதித்து உள்ளார். பலநாட்களாக இவரை தேடி வந்த போலீசார் நேற்று டெல்லியின் மார்க்கெட் பகுதியில் சோப்ராவை கைது செய்துள்ளனர்.
வேலை இல்லாத பிரச்னையால், கடன் தொல்லையில் இருந்த சோப்ரா புதிய பிசினஸ் ஒன்றை தொடங்கும் திட்டத்தை உருவாக்கி இருக்கிறார். இதன்படி அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தில் புதிய மொபைல் ஃபோன்களை வாங்கத் தொடங்கி இருக்கிறார். ஆப்பிள், சாம்சங், மோட்டோ என பல நிறுவனங்களில் விலை உயர்ந்த மொபைல்களை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். பின்பு வெவ்வேறு முகவரில் இந்த மொபைல் போன்களை பணம் கொடுத்து பெற்றுக்கொண்டு, சிறிது நேரம் கழித்து பார்சலில் வந்தது மொபைல் இல்லை, வெறும் கல் மட்டும்தான் என்று புகார் அளித்துள்ளார். பின்பு அந்த மொபைல்களை தனக்கு தெரிந்த கடைகளில் விற்று 50 லட்சம் ரூபாய் வரையில் சம்பாதித்து இருக்கிறார்.
சோப்ரா கூறிய புகாரின் காரணமாக அமேசான் நிறுவனமும் அவரின் மொபைலுக்கான தொகையை திரும்ப அளித்துள்ளது. இதைபோல் சோப்ரா தொடர்ந்து அதே நிறுவனத்தில் வெவ்வேறு பெயர், மற்றும் முகவரியில் மொபைலை ஆர்டர் செய்து வாங்கி பின்பு பணத்தை திரும்பி கேட்கும் செயலில் இறங்கி இருக்கிறார். இந்த நூதனமான மோசடியை கண்டுப்பிடித்த போலீசார் சோப்ராவை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் இருந்தனர். இதையடுத்து சோப்ரா நேற்று டெல்லியில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Loading More post
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு