இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவுள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின் தொலைபேசி உரையாடல் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். சந்திரசேகருடன் பேசியது டிடிவி தினகரன் தானா என்பதை கண்டறிய தினகரனின் குரல் மாதிரியை காவல்துறை கோரியது. தினகரன் மறுத்த நிலையில், தொலைக்காட்சிகளில் அவர் அளித்த பேட்டிகளின் குரலை பதிவு செய்து, அதனை ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ததாக தெரிகிறது. அதில் தினகரனின் குரல் மாதிரி, சுகேஷ் சந்திரசேகருடன் பேசிய குரலுடன் ஒத்துப்போவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவரங்களை கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்த்து, அடுத்த வாரம் தாக்கல் செய்ய டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் குற்றபத்திரிகையில் தினகரனின் பெயர் இடம் பெறாத நிலையில், தற்போது தரகர் சுகேஷ் சந்திரசேகருடன் குரல் மாதிரி ஒத்துப்போவதாக ஆய்வக அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரது பெயரை கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
Loading More post
தொகுதி பங்கீடு : அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
தொகுதி பங்கீடு : மதிமுக, விசிகவுடன் திமுக இன்று பேச்சுவார்த்தை
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி