27 விதமான பொருள்களுக்கும், சேவைகளுக்கும் ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் 22வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்கினாலும் ஆதார், பான் எண்களை தரத் தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்துக்கு பின் பேசிய ஜேட்லி, 27 பொருட்கள், சேவைகளுக்கு வரி குறைப்படுவதாக கூறினார். இதில் வணிகச் சின்னம் இல்லாத சித்த, ஆயுர்வேத மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதமாகவும், ஆயுர்வேத மருந்துகளுக்கு வரி 5% ஆக குறைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். உணவகங்களுக்கு ஜிஎஸ்டியை குறைப்பது குறித்து ஆராய அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என்றும், உணவகங்களுக்கான வரி மாற்றம் குறித்து 2 வாரத்தில் பரிந்துரை செய்யப்படும் என்றும் அருண்ஜேட்லி தெரிவித்தார்.
கைத்தறி நூலுக்கு ஜிஎஸ்டி வரி 18%லிருந்து 12%ஆகவும், சில எழுதுபொருட்களுக்கு வரி 18%ஆக குறைக்கப்படும் என்றும் அவர் கூறினார். அத்துடன் சரக்குகளை கொண்டு செல்ல இ-வே பில் ஜனவரி முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் எனவும், டீசல் எஞ்சின் உதிரி பாகங்களுக்கு ஜிஎஸ்டி 18%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்