இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்: கூடுதல் குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன் பெயர்? 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழங்க முயன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், டிடிவி தினகரனின் பெயரை கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்க்கவுள்ளதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Advertisement

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்‌ பெற்றதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரின், தொலைபேசி உரையாடல் குறித்து காவல்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். சந்திரசேகருடன் பேசியது டிடிவி தினகரன்தானா? என்பதை கண்டறிய தினகரனின் குரல் மாதிரி காவல்துறைக்கு தேவைப்பட்டது. தினகரன் மறுத்த நிலையில், தொலைக்காட்சிகளில் அவர் அளித்த பேட்டிகளின் குரலை பதிவு செய்து, அதனை ஆய்வுக்கூடத்தில் சோதனை செய்ததாக தெரிகிறது. 

அதில் தினகரனின் குரல் மாதிரி, சுகேஷ் சந்திரசேகருடன் பேசிய குரலுடன் ஒத்துப்போவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விவரங்களை கூடுதல் குற்றப்பத்திரிகையில் சேர்த்து, அடுத்த வாரம் தாக்கல் செய்ய டெல்லி போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் குற்றபத்திரிகையில் தினகரனின் பெயர் இடம் பெறாத நிலையில், தற்போது இரட்டை இலை விவகாரத்தில் தொலைபேசி உரையாடல் தொடர்பான ஆய்வு அறிக்கை, தினகரனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது. 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement