அதிக நேரம் வேலை செய்ததால் மரணம்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஜப்பானை சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சுமார் 159 மணிநேரம் வேலை செய்ததால் உயிரிழந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Advertisement

ஜப்பானை சேர்ந்த மிவா சாடோ என்னும் அரசியல் பத்திரிகையாளர் 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதய செயலிழப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிசிக்சைக்குப் பின்னர் அவர் உயிர் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் மருத்துவர்கள் அளித்துள்ள அறிக்கையில் மிவா அளவுக்கு அதிகமான வேலைப்பளு காரணமாக உயிரிழந்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளனர். மிவா, மாதம் ஒன்றுக்கு இரண்டு நாட்கள் மட்டுமே ஓய்வு எடுத்துக்கொண்டு தொடர்ந்து பணிக்கு சென்றுள்ளார். இதனால் அவர் மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வு மேலும் சில உபாதைகளுக்கு ஆளாகியுள்ளார்.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜப்பானில் மட்டும் ஆண்டு ஒன்றுக்கு வேலை சம்பந்தப்பட்ட மன அழுத்தம் காரணமாக சுமார் 2,000 பேர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஜப்பானில் கடந்த 2015 ஆம் ஆண்டு மேலும் ஒரு பெண் அதிகமான வேலைப்பளுவால் தற்கொலை செய்து கொண்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண ஜப்பான் அரசாங்கம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement