திருப்பதியில் குழந்தையை கடத்திய தம்பதிக்கு ஒன்றரை ஆண்டு சிறை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

திருப்பதி ஏழுமலையான் கோயில் அருகே 9 மாத குழந்தை கடத்தி செல்லப்பட்ட வழக்கில் கைதான தம்பதிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து திருப்பதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Advertisement

கடந்த ஜூன் 14ஆம் தேதியன்று ஆந்திர மாநில‌ம் அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 9 மாத குழந்தை சென்ன கேசவன், ஏழுமலையான் கோயில் அருகே மர்ம நபர்களால் கடத்தப்பட்டான். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தல்காரர்களை போலீசார் தேடி வந்த நிலையில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்காயி, அசோக் தம்பதியினர் பேளுக்குறிச்சி காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். அதையடுத்து திருப்பதி போலீசார் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த திருப்பதி குற்றவியல் நீதிமன்றம், கடத்தலில் ஈடுபட்ட தம்பதிக்கு, ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 400 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement