அறிவோம் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளை..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெங்கு காய்ச்சல் குறித்த அச்சம் அதிகரித்து வரும் இந்த வேளையில், இந்த காய்ச்சலுக்கான அறிகுறிகளை அறிந்துகொள்வது அவசியமாகிறது.


Advertisement

டெங்கு காய்ச்சல், கொசுக்கடியால் பரவக்கூடிய ஒருவகை வைரஸால் ஏற்படுகிறது. கடுமையான தலைவலி இருப்பது டெங்குவிற்கான முதல் அறிகுறி என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தலைவலியைத் தொடர்ந்து கண்களுக்கு பின்னாலும் வலி ஏற்படும். அதனைத் தொடர்ந்து கடுமையான தசை மற்றும் மூட்டு வலி இருக்கும். குமட்டல், வாந்தி ஆகியவையும் டெங்குவின் அறிகுறிகள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தோலில் அரிப்பு, சொறி மற்றும் வீக்கம் ஆகியவைகளும் டெங்குவின் அறிகுறிகள். எனவே இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement