JUST IN

Advertisement

ஒரேநாளில் ரூ.53 உயர்ந்த எரிவாயு சிலிண்டர் விலை!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மானியமல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரேநாளில் ரூ.53 உயர்த்தப்பட்டுள்ளது. 


Advertisement

மானி‌யம் அல்லாத எரிவாயு சிலிண்டர் விலை கடந்த ஜனவரி மாதம் 1ஆம் தேதி‌ ரூ.594.50 காசுகளாக இருந்தது. பிப்ரவரியில் 661 ரூபாயாகவும், மார்ச் மாதத்தில் 85 ரூபாய் அதிகரித்து 746 ரூபாய் 50 காசுகளாகவும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் சற்று விலை குறைந்து 731 ரூபாய் 50 காசுகளாகவும், மே மாதத்தில் மேலும் விலை குறைந்து 638 ரூபாய் 50 காசுகளா‌கவும் இருந்தது. இதையடுத்து ஜூன் மாதம் ரூ.559.50 காசுகளும், ஜூலை 1 ஆம்தேதி 574 ரூபாயாகவும் இருந்தது. ஆகஸ்ட் மாதம் மானியமல்லாத சிலிண்டர் விலை ‌533 ரூபாயாகவும், செப்டம்பர் ஒன்றாம் தேதி விலை அதிகரித்து 607 ரூபாயாகவும், செப்டம்பர் இறுதிநாளில் 609 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி மானியம் அல்லாத சிலிண்டர் விலையில் 53 ரூபாய் 50 காசுகள் அதிகரித்து 656 ரூபாய் 50 காசுகளாக இருக்கிறது. இந்த விலை நிலவரப்படி கடந்த 3 மாதங்களில் மானியம் அல்லாத எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.123.50 காசுகள் அதிகரித்துள்ளன.

மானிய சிலிண்டரின் விலையை பொறுத்த வரையில் பொறுத்த கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.422.21 காசுகளாகவும், பிப்ரவரியில் 422 ரூபாய் 30 காசுகளும் இருந்தது. மார்ச்சில் ரூ.422.43 காசுகளும் ஏப்ரலில் ரூ.428.40 காசுகளும் இருந்த மானிய சிலிண்டர் விலை, மே மாதத்தில் ரூ.430.27 காசுகளும் ஜூனில் ரூ.434.15 காசுகளும் இருந்தது. ஜூலையில் ரூ.465.56 காசுகளும் ஆகஸ்ட்டில் ரூ.467.35 காசுகளும் இருந்த மானிய எரியவாயு சிலிண்டர் விலை செப்டம்பர் ஒன்றாம் தேதி ரூ.475.26 காசுகளும், செப்டம்பர் 30 ஆம் தேதி மேலும் அதிகரித்து ரூ.476.78 காசுகளுமாக இருந்தது. இந்நிலையில், அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில் மானிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.479.11 காசுகளாக உயர்ந்துள்ளது. ‌கடந்த 3 மா‌தங்களில் மானிய எரிவாயு சிலிண்டர் விலை ரூ.11.76 காசுகள் அதிகரித்துள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement