தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடி ரூபாய்க்கு மேல் கடனாகப் பெற்று, அதனை தொழிலதிபர் விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. எனவே அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதனிடையே இங்கிலாந்துக்குத் தப்பிய விஜய் மல்லையாவை, கைது செய்து அழைத்துவரும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியிருந்தது இந்திய அரசு. அவரை நாடு கடத்தி தங்களிடம் ஒப்படைக்குமாறு இங்கிலாந்திடம் மத்திய அரசு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது. இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் விஜய் மல்லையாவை இங்கிலாந்து அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால் அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலையானார்.
இந்நிலையில் இந்தியாவில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக விஜய் மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் விஜய் மல்லையாவிற்கு பிணை பெறுவது தொடர்பாக அவரின் அதிகாரிகள் உடனடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. ஒருவேளை விஜய் மல்லையா இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில் அவர், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் வழக்கு விசாரணையை சந்திப்பார்.
Loading More post
உ.பி: அறுவை சிகிச்சை வார்டில் ஹாயாக படுத்துக்கிடந்த தெருநாய்.. வைரல் வீடியோ
சிவகங்கை: சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டி இருவர் உயிரிழப்பு!
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் இழப்பீடு வழங்குக: ஸ்டாலின்
தமிழக பேருந்துகளை சிறைபிடித்த ஆந்திர அதிகாரிகள்: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
"இது மலிவான செயல் பெய்ன்..." - அஸ்வின் விவகாரத்தில் கொதித்த கிரேக் சேப்பல்!
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு