[X] Close >

பரோலில் சசிகலா வருவதால் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை: ஜெயக்குமார் பேட்டி

No-impact-if-sasikala-come-with-Parole--Minister-Jayakumar

பரோலில் சசிகலா வந்தால் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.


Advertisement

சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக் குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரைப் பார்ப்பதற்காக சசிகலாவுக்கு பரோல் கேட்கப்பட்டுள்ளது. சசிகலா பரோலில் வரும் பட்சத்தில் அரசியல் சூழலில் ஏதும் மாற்றம் ஏற்படுமா என அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்டதற்கு எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. அவர் சொந்தக் காரணத்திற்காக வருகிறார் என பதிலளித்தார்.

சென்னை பட்டினம்பாக்கத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், காவல்துறையை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக தினகரனின் புகார் குறித்து கூறுகையில், "சட்டத்திற்கு உட்பட்டவர்கள் யாரும் அஞ்சத் தேவையில்லை. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள்தான் அஞ்ச வேண்டியிருக்கும். ஜனநாயக முறைப்படி நடக்கும் அரசின் மீது குற்றச்சாட்டு வைத்து, ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடும் போது அதனை சட்டம் எப்படி அனுமதிக்கும்? அரசை விமர்சனம் செய்யலாம். தனிப்பட்ட முறையில் முதலமைச்சர், அமைச்சரை விமர்சனம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக துண்டு பிரசுரம் வினியோகித்ததாக டி.டி.வி.தினகரன், புகழேந்தி உள்பட அவரது ஆதரவாளர்கள் 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close