JUST IN

Advertisement

த்ரிஷா இல்லனா நயன்தாரா 2 எடுக்கவில்லை: ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் பார்ட் 2 எடுக்கவில்லை என்று அறிவித்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அப்படியொரு யோசனையே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.


Advertisement

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான படம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’. இதை அறிமுக இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இது வசூலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற்றது. இந்தப் படத்தை அடுத்து சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார் ஆதிக். ஆனால் அப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்தது. மறுபடியும் ஜி.வி.பிரகாஷ் இவருக்கு கால்ஷீட் தந்திருந்தார். இருவர் கூட்டணியில் புதியதாக தயாராகும் படத்திற்கு ‘விர்ஜின் மாப்பிள்ளை’ என்று தலைப்பு வைத்திருந்தார்கள்.இந்தத் தலைப்புக்கு பதிலாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா-2’ என்று வைத்தால் பட புரமோஷனுக்கு வசதியாக இருக்கும் என்று படக்குழு ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா-2’ இல்லை என்று மறுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அப்படியொரு பேச்சுவார்த்தையே எங்களுக்குள் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement