வீடுகளின் அருகில் தேங்கும் மழை நீரை பொதுமக்களே முன்வந்து அகற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகரித்து பலி எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. அத்துடன் மழைக்காலமும் தொடங்கியுள்ளதால் அனைத்து இடங்களிலும் காய்ச்சல் ஏற்பட்டு மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், டெங்கு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும், அனைத்து நோய்தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மழைக்காலங்களில் வீடுகளில் உள்ள தொட்டி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்காத வகையில் பொதுமக்கள் கண்காணிக்க வேண்டும் எனவும், டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசு சுத்தமான நீரில் உற்பத்தியாவதால், வீட்டை சுற்றிலும் தண்ணீர் தேங்கமால் சுகாதாரத்துடன் வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Loading More post
டாப் 5 தேர்தல் செய்திகள்: ஆட்சி கருத்துக்கணிப்பு முதல் கட்சி கூட்டணி முடிவுகள் வரை
மகளிர் தினத்தன்று பெண் தொழில்முனைவோரிடம் பொருட்கள் வாங்கிய பிரதமர் மோடி
தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியமைக்கும்: டைம்ஸ் நவ் - சி வோட்டர்ஸ் கருத்துக்கணிப்பு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: பழனிசாமி வாக்குறுதி
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை