ஒரு நாள் போட்டியை விட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடுவதைதான் அதிகம் விரும்புகிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் கூறினார்.
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது. நாக்பூர், உமேஷ் யாதவுக்கு சொந்த ஊர். இந்தப் போட்டியில் விளையாடுவது பற்றி அவர் கூறும்போது, ’கிரிக்கெட்டில் டீம் காம்பினேஷன்தான் முக்கியம். உள்ளுர்க்காரர் என்பதால் இங்கு விளையாட வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. ஒரு நாள் போட்டியை விட, டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசுவதையே அதிகம் விரும்புகிறேன். ஒரு நாள் போட்டியில் கால அவகாசம் குறைவாக இருக்கிறது. விக்கெட்டை கணித்தும் பேட்ஸ்மேனை கணித்தும் பந்துவீச நேரம் தேவை. அது டெஸ்ட் போட்டியில் கிடைக்கிறது. அதில்தான் திட்டமிட்டப்படி பந்து வீச முடிகிறது. அது சவாலான ஒன்றுதான். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் என இரண்டு வகை ஆட்டங்களிலும் விளையாடுவது எனக்கும் நல்லதுதான்’ என்றார்.
Loading More post
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி