இந்திய-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. பெங்களூரில் நடந்த நான்காவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. கடைசி போட்டி நாக்பூரில் இன்று நடக்கிறது.
பெங்களூர் போட்டியில் பந்துவீச்சாளர்கள் பும்ரா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு, மாற்று வீரர்களான உமேஷ் யாதவ், அக்ஷர் பட்டேன், முகமது ஷமி களமிறக்கப்பட்டனர். அவர்களின் தகுதியை தீர்மானிக்க வேண்டியிருப்பதால், இந்தப் போட்டியிலும் அவர்களையே களமிறக்க, கோலி திட்டமிட்டுள்ளார். அதனால் பெங்களூரில் விளையாடிய அணியே இதிலும் களமிறங்கும்.
போட்டி இன்று பிற்பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்று தரவரிசையில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறும் முனைப்பில் இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது. தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் நோக்கில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
''இந்திரா காந்தி பிரகடனம் செய்த எமர்ஜென்சி ஒரு பிழை'' - ராகுல் காந்தி கருத்து
கட்சிக்கு தனித்துவத்தை விரும்பும் வைகோ: கடந்த பேரவைத் தேர்தல்களும் மதிமுகவும்!
அசாம் தேர்தல் களம்: தேயிலைத் தொழிலாளர்களை குறிவைக்கும் பாஜக, காங்கிரஸ்!
திருப்பூர்: ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை - வட மாநில கொள்ளையர்கள் 6 பேர் கைது.!
சூடுபிடிக்கும் தமிழக தேர்தல்களம்.. மீண்டும் குழப்பத்தில் புதுச்சேரி.. முக்கியச் செய்திகள்!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?