இந்தியன் 2 - மறுபடியும் கமல், ஷங்கர் கூட்டணி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இந்தியன் 2ம் பாகம் எடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதையொட்டி கமல் அரசியலுக்கு வருவாரா? இல்லை மீண்டும் சினிமாவுக்கு போகப் போகிறாரா? என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர் அவரது ரசிகர்கள்.


Advertisement

கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கிய படம் இந்தியன். இது 1996ல் வெளியானது. ஊழலை ஒழிப்பதற்காக கமல் டபுள் ஆக்‌ஷனில் இறங்கி மிகச் சிறப்பாக நடித்திருந்தார். இளைய கமல் லஞ்சம் கொடுத்தாவது அரசாங்க வேலையை வாங்கிவிட வேண்டும் என்று தவியாய் தவித்து கொண்டிருக்கும் போது வயதான கமல் ஊழலை ஒழிப்பதற்காக கொலை வரை போய் புதிய சுதந்திர போராட்டத்தையே நடத்த தொடங்கி இருப்பார். 
இந்தியன் மூன்று தேசிய விருதுகளை பெற்றது. கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் ஸ்பெஷல் எஃபெக்ட் செய்தமைக்காக வெங்கி என்பருக்கும் இரு விருதுகள் போய் சேர்ந்தன. சிறந்த நடிகருக்கான விருதை கமல் பெற்றார். 

தற்சமயம் கமலின் விஸ்வரூபம் 2 தான் வரும் என பேச்சு அடிப்பட்டது. அதற்கான அறிவிப்பை கூட கமல் வெளியிட்டிருந்தார். ஆனால் சற்றும் எதிர்பார்க்காத சந்தர்ப்பத்தில் இந்தியன் 2 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான செய்தியை தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜூ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் தெலுங்கு, தமிழ் இரு மொழிகளில் தயாரிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


Advertisement

தமிழில் இந்தியன் 2 என்றும் தெலுங்கில் பார்தடீயடு 2 என்றும் தலைப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ட்விட்டர் வலைதளத்தில் இதற்கான ஹேஷ்டேக்ஸ் ட்ரெண்ட் ஆகி வருகிறது. கமல் இது குறித்து இன்று மாலை முறையாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தரப்பில் எந்த செய்தியும் வெளியாகவில்லை.

சில மாதங்களுக்கு முன்பே கமல் வட்டாரத்தில் இந்தப் பேச்சு அடிப்பட்டது. அப்போது அவர் தரப்பில் கமல்-ஷங்கர் கூட்டணி உறுதியானதுதான். அதற்கான பேச்சு வார்த்தை சில நாட்களாகவே சென்றுகொண்டிருக்கிறது. ரஜினியின் 2.ஓ வேலைகள் முடிந்த பிறகு கமல், ஷங்கர் சேர்ந்து அறிவிப்பார்கள். அப்போதுதான் தயாரிப்பாளர் யார் என்பது தெரிய வரும் என கூறியிருதார்கள். 
இந்நிலையில் தயாரிப்பாளரே அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 21 ஆண்டுகள் கழித்து கமல் மறுபடியும் இந்தியன் தாத்தா வேடம் போட இருக்கிறார். சரி.. அவரது அரசியல் முகம்? இதற்கு அவர்தான் பதில் தர வேண்டும். 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement