ஜெயலலிதா மரணம்: சசிகலா மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மனு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா உள்பட 12 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார்.


Advertisement

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் சட்டசபை சபாநாயகர் பி.எச் பாண்டியன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் இந்த 12 பேர் மீது புகார் அளித்துள்ளதாக டிராபிக் ராமசாமி தன் மனுவில் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் டிராபிக் ராமசாமி தன் மனுவில் கோரியுள்ளார்.

மேலும் ஓ.பன்னீர்செல்வம், பி.எச்.பாண்டியன், தீபா ஆகியோருக்கு ராணுவப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் டிராபிக் ராமசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement