[X] Close >

நடிகர் டாக்டர் ராஜசேகர் அம்மா காலமானார்

Actor-Rajasekhar-s-mother-Aandal-Varadaraj-passed-away

நடிகர் டாக்டர் ராஜசேகரின் அம்மா நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று சென்னையில் நடைபெற்றது.


Advertisement

இதுதாண்டா போலீஸ் படத்தின் மூலம் பரவலாக கவனத்தை பெற்றவர் டாக்டர் ராஜசேகர். இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து மணந்து கொண்டார். சென்னைவாசியான இவர் திருமணத்திற்குப் பின் ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். தற்சமயம் தெலுங்கு பட உலகில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக வலம் வருகிறார். அவர் ஆந்திராவில் இருந்தாலும் அவரது தாயார் சென்னையில்தான் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரது தாயார் ஆண்டாள் வரதராஜன் நேற்று காலமானார். இவருக்கு 82 வயது. இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இறுதி சடங்கு இன்று சென்னையில் நடைபெற்றது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close