முகம் சுளிக்க வைத்த ஜனாதிபதி மகளின் செல்ஃபி...

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அஜர்பைஜான் நாட்டின் ஜனாதிபதி இல்ஹாம் அலியாவின் மகள், ஐ.நா சபையில் எடுத்துக் கொண்ட செல்ஃபி கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. 


Advertisement

72 வது ஐ.நா சபை போது கூட்டம் நடந்து கொண்டிருக்கும் தருணத்தில் பல நாடுகள் கலந்து கொண்டு தங்கள் நாட்டின் பிரச்சனைகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர். அதே போல் 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற இன அழிப்பு மற்றும் 30,000 பேர் இறந்த சம்பவத்தை குறித்து ஜனாதிபதி இல்ஹாம் ஐ.நா மன்றத்தில் உலக தலைவர்கள் மத்தில் முக்கிய உரையாற்றிக் கொண்டிருந்தார்.

அதே சமயம் தமது தாயாருடன் இருந்த இல்ஹாமின் மகள் லேய்லா அவையில் இருந்துகொண்டே தமது மொபைல் போனில் விதவிதமான செல்பிகள் எடுத்துள்ளார். அச்செயல் அவையில் உரையை கவனித்துக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜனாதிபதி மகளின் இத்தகைய செயலை பலர் விமர்சித்துள்ளனர். கலாச்சாரம் குறித்து துளியளவும் அறிந்திராத பணக்கார குழந்தைகளின் செயல் இது. இவ்வாறுதான் அவரது பெற்றோரும் அவரை வளர்த்திருப்பார்கள் என சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர்.
    
   


Advertisement


 
 

loading...

Advertisement

Advertisement

Advertisement