சென்னையில் கொடூரம்: துண்டு துண்டாக வெட்டி ஆண் கொலை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

முகப்பேரில் சாக்குப்பையில் துண்டாக வெட்டப்பட்ட கால் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

சென்னையை அடுத்த நொளம்பூரில் நேற்று காலை கால்வாயில் துர்நாற்றம் அதிகம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சி அம்பத்தூர் 7 வது மண்டலத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த துப்புரவுப்பணியாளர்கள், சாக்குப்பையை எடுத்தபோது அதில் ஆண் உடல் ஒன்று இருந்தது. தலை, கை, கால்கள் இல்லாத நிலையில் இருந்த அந்த உடல்  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 5 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், முகப்பேர் 6 வது பிளாக்கில் பிளாஸ்டிக் சாக்குப்பையில் சுற்றி இருந்த இடது கால் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்ட நபர் 40 வயதில் இருந்து 45 வயது வரை இருக்க கூடும் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும் உயிருடன் இருக்கும் போதே உடல் பாகங்கள் வெட்டி எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகின்றது. அதே போல் கொலை சம்பவம் முகப்பேர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள வீடுகள் அல்லது கம்பனியின் உள்ளே நடத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்தப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக்கொண்டு விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், காணாமல் போனவர்கள் பற்றிய புகார்களை இத்துடன் இணைத்து விசாரித்து வருகிறார்கள். கொல்லப்பட்டவரின் பிற உடல்பாகங்கள் எங்கு கிடக்கின்றன? கொலை செய்யப்பட்டவர் யார்? கொலைக்கான காரணம் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement