சிறுமிகளை வளைகுடா நாட்டு முதியவர்கள் திருமணம் செய்து கொள்ளும் விவகாரத்தில், ஓமன் நாட்டை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவர் ஹைதராபாத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை ரூ.5 லட்சம் கொடுத்து திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் வெளி உலகிற்கு தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுமியின் தாயார் போலீஸில் புகார் கொடுத்தபோதுதான் சிறுமியின் உறவினர்கள், முகவர்கள் பணம் வாங்கிக்கொண்டு சிறுமியை முதியவருக்கு திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு வந்ததாகக் கூறி திருமணம் புரிய சிறுமியை தேட வந்த ஓமன் நாட்டவரான அல் ஷெயாதி சுலைமானை போலீசார் கைது செய்தனர். சுலைமான் திருமணம் புரிய சிறுமியை தேடித்தருவதற்காக, அவருடன் வந்த தரகர் அல் ஷெயாதி முகமது கல்ஃபானும் கைது செய்யப்பட்டார். இது தவிர ஓமன் நாட்டு முதியவரை அழைத்து வந்த, அந்நாட்டை சேர்ந்த அல் ஆவ்தி யாசிர் என்பவரையும் ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர். இது தவிர இந்தியர்கள் இருவரும் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர். வளைகுடா முதியவர்களுக்கு ஹைதராபாத் சிறுமிகளை திருமணம் செய்து வைத்த விவகாரம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
Loading More post
இறந்த மீனவரின் உடலை ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் மறுப்பு - உறவினர்கள் சாலைமறியல்
"நிச்சயம் குரல் எழுப்புகிறேன்" ஆதங்கத்தை வெளிப்படுத்திய தொழிலதிபர்.. ஆறுதல் கூறிய ராகுல்!
கார் வாங்க போறிங்களா - ரூ10 லட்சம் பட்ஜெட்டில் அசத்தல் லிஸ்ட்!
திண்டுக்கல்: ஆசிரியைக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மூடப்பட்ட அரசுப் பள்ளி
கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கொரோனா இல்லை
’எழிலரசி தாதா கிடையாது. அவர் பாஜகவில் இணையவுமில்லை’- புதுவை பாஜக தலைவர் சாமிநாதன் பேட்டி!
ஜெயலலிதா பாணியில் ஸ்டாலின் : உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறதா விசிக, மதிமுக?
எளிமையான மனிதர், வலிமையான அரசியல்வாதி, 'வைரல்' பின்புலம்... யார் இந்த பெர்னி சாண்டர்ஸ்?
அடுத்தடுத்து விழும் மம்தா அமைச்சர்களின் விக்கெட்.. மேற்கு வங்கத்தில் அரசியல் டுவிஸ்ட்!