ஜெயலலிதா இறப்பு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்றும் மாநில அரசின் விசாரணை ஆணையமே போதும் என்றும் கூறியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரி திமுக தொடர்ந்துள்ள வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், தற்போது அதுபற்றி கருத்துக்கூற முடியாது என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 74 நாட்கள் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பலன் அளிக்காமல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி காலமானார். மருத்துவமனையில் அவர் இருந்தபோது எந்த புகைப்படமும் வெளிவராததால் அவரது மரணம் குறித்து சர்ச்சை எழுந்தது.
இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்துள்ளது. தமிழக அரசு நியமித்துள்ள விசாரணை ஆணையத்தால் எந்த பயனும் இல்லை சிபிஐ விசாரணை கோருவோம் என எதிர்க்கட்சிகள் கூறிவரும் நிலையில் அமைச்சர் சி.வி.சண்முகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Loading More post
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
உயர்த்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை - எந்தெந்த பைக்குகள் தெரியுமா?
இந்தியாவில் சாமானியர்களுக்கு 'சாத்தியமில்லாத' வெளிநாட்டு கொரோனா தடுப்பூசிகள்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!