நிர்வாக ரீதியாக தமிழகத்துக்குத் தேவைப்பட்டால் பாரதிய ஜனதா கட்சியுடனும் கைகோர்க்கத் தயாராக இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியலில் தீண்டாமை என்ற ஒன்று இல்லை என்று தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் வலதுசாரி கொள்கைகள் தனக்கு அதிருப்தி அளிப்பதாகக் கூறிய கமல்ஹாசன், குறைந்தபட்ச செயல் திட்டம் உருவானால், அக்கட்சியுடன் தொடர்பு வைத்துக் கொள்வதில் தனக்கு தயக்கம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். கட்சி, கொடி, சின்னம் ஆகியவற்றை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறியுள்ள கமல், இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சி தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தேர்தலில் போட்டியிட்டு சட்டரீதியான பொறுப்பை ஏற்கும் சூழ்நிலை ஏற்பட்டால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அரசியலில் ஈடுபடும் முடிவை உணர்ச்சிவசப்பட்டு எடுக்கவில்லை என்றும், நிதானமாக யோசித்தே எடுத்திருப்பதாகவும் கமல் தெரிவித்துள்ளார்.
Loading More post
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலினுக்கு சபாநாயகர் பாராட்டு
வன்னியர் இடஒதுக்கீட்டை திமுகவே செயல்படுத்தும்: மு.க.ஸ்டாலின்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை