'இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் ஐபிஎல் மீது பழிபோடுவதா?'-கம்பீர் விமர்சனம்

'இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் ஐபிஎல் மீது பழிபோடுவதா?'-கம்பீர் விமர்சனம்
'இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்றால் ஐபிஎல் மீது பழிபோடுவதா?'-கம்பீர் விமர்சனம்

இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல் என்றும், அதனை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஐபிஎல் தொடரில் மட்டுமே சிறப்பாக விளையாடுவதாகவும், உலகக் கோப்பை போன்ற தொடர்களில் சோபிக்க முடியவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டுக்கு நடந்த மிகச்சிறந்த விஷயம் ஐபிஎல் என்றும், அதனை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்றும் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விருது விழாவில் பங்கேற்று கவுதம் கம்பீர் கூறுகையில், ''இந்திய கிரிக்கெட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐபிஎல். ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே, பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறை இந்திய கிரிக்கெட் அணி தோல்வியை சந்திக்கும் போது, ஐபிஎல் தொடரையே விமர்சிக்கிறார்கள். ஐசிசி தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால், வீரர்களின் ஆட்டத்தையே விமர்சிக்க வேண்டும். அதைவிடுத்து ஐபிஎல் தொடர் மீது பழிபோடுவது சரியாக இருக்காது.

அதேபோல் இந்திய கிரிக்கெட் அணிக்கு, இந்திய பயிற்சியாளர்கள் நியமிக்கும் நடைமுறை மீண்டும் வந்துள்ளது. இது மிகச்சிறந்த மாற்றம். இந்திய பயிற்சியாளர்களுக்கு வெளிநாடுகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை.  இந்திய அணிக்கு இந்தியர்களே பயிற்சியளிக்க வேண்டும் என்று நம்புகிறேன். லக்னோ அணியின் பயிற்சியாளராக நான் செயல்பட்டு வருகிறேன். அதேபோல் அனைத்து அணிகளுக்கும் இந்திய பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். பிசிசிஐ தனது 50% வருமானத்தை ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு ஒதுக்க வேண்டும்'' என்று கூறினார்.



Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com