சத்தியமங்கலத்தில் வாகனங்கள் 30 கிமீ வேகத்தை தாண்டத் தடை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாகச் செல்லும் வாகங்கள் 30 கிமீ வேகத்தை தாண்டக் கூடாது என வனத்துறை எச்சரித்துள்ளது. வனவிலங்குகள் உயிரிழப்பைத் தடுக்கும் வண்ணம் இந்த எச்சரிக்கையை வனத்துறை விடுத்துள்ளது.


Advertisement

பண்ணாரி, ஆசனூர் வனத்தில் பெய்த மழை காரணமாக சாலையோரத்தில் புற்கள் வளர்ந்துள்ளன. அவற்றை உண்பதற்கும், தண்ணீர் அருந்தவும் சாலையைக் கடக்கும் மான்கள், யானைகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்க நேரிடுகிறது. அவற்றைத் தடுக்கும் விதமாக, தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோ மீட்டர் வேகத்தைத் தாண்டி வாகனங்கள் செல்லக்கூடாது என வனத்துறை அறிவித்துள்ளது. வாகனங்களின்‌ வேகத்தைக் கட்டுப்படுத்த எச்சரிக்கை பலகைகள் மற்றும் 15 இடங்களில் வேகத்தடையும் அமைக்கப்பட்டுள்ளது.
 

loading...

Advertisement

Advertisement

Advertisement