[X] Close >

வருமான வரித்துறை அதிகாரி மகன் சடலமாக மீட்பு!

kidnapped

கடந்த 10 நாட்களுக்கு முன் கடத்தப்பட்ட வருமானவரித் துறை அதிகாரி மகன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


Advertisement

பெங்களூரு வருமான துறை அதிகாரி நிரஞ்சன் குமார். இவரது ஒரே மகன் சரத் (19). இவர் கடந்த 12 தேதி  தன் நண்பர்களுடன் புதிதாக வாங்கிய காரில் வெளியே சென்றார். வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், நிரஞ்சன் குமார் அவரை ஃபோனில் தொடர்பு கொண்டார். ஆனால் சரத்தின் ஃபோன் தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்துள்ளது.

2 நாட்களுக்குப் பின் சரத் தன் பெற்றோர்களுக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை அனுப்பினார். அதில் தான் கடத்தப்பட்டிருப்பதாகவும் கடத்தல்காரர்கள் 50 லட்சம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறினார். அதிர்ச்சியடைந்த சரத்தின் பெற்றோர், பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் தனி குழு அமைத்து தீவிரமாக சரத்தை தேடி வந்தனர். சரத் கடத்தப்பட்டு 10 நாட்களுக்குப் பின், இன்று அவரது உடல் சிதைந்த நிலையில் பெங்களூரு ராமஹள்ளி ஏரிக்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close