[X] Close >

கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள்: நீதிபதிகள் கருத்து

Madhurai-high-court-ask-about-keezhadi-archaeological-site

கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைகிளையை சேர்ந்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Advertisement

கீழடியில் அகழாய்வு பணிகள் தொடர வேண்டுமென வழக்கறிஞர் கனிமொழி மதி தொடர்ந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தொல்லியல் துறை தரப்பில் ஆஜரான கண்காணிப்பாளர் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் அகழாய்வு செய்வதற்கான உரிமம் முடிவடைவதால்,மேலும் புதுப்பிக்க விண்ணப்பித்திருப்பதாக கூறினார். தமிழக அரசு அகழாய்வில் இணைந்து கொள்ள விண்ணப்பித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு மாதங்கள் மழைக்காலம் என்றும், அகழாய்வு பகுதியில் உள்ள நில உரிமையாளர்கள் தென்னை மரங்கள் வளர்த்து வருவதால், இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்று தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நில உரிமையாளர்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து நாளை விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினர்.


Advertisement

அகழாய்வு நடந்து வரும் இடங்களுக்கு சொந்தமான விவசாயிகளுக்கு நிவாரன தொகை கொடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் விவசாயிகள் முறையிட்டனர். இதனைத்தொடர்ந்து விவசாயிகளுக்கு பணம் வழங்குவது தொடர்பாக தீர்ப்பின்போது கவனத்தில் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் கூறினர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close