பிரேம்ஜி இசையமைக்க வாய்ப்பு கொடுத்தார் யுவன்ஷங்கர் ராஜா 

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பிரேம்ஜியை இசையமைப்பாளராக பரிந்துரை செய்திருக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா.


Advertisement

வெங்கட்பிரபு இயக்கத்தில் தயாராகி வரும் படம் பார்ட்டி. இந்தப் படத்தின் முக்கால்வாசி படப்பிடிப்பு பிஜி தீவில் நடந்து முடிந்துள்ளது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் படத்தின் படப்பிடிப்பை தங்களது தீவில் வந்து மேற்கொள்ளும்படி பிஜி அரசே அழைப்பு விடுத்திருக்கிறது என்று ஒரு செய்தி வெளியானது. கடந்த 2 மாதங்களாக பிஜி தீவை வலம் வந்த குழு இப்போது இந்தியா திரும்பியுள்ளது. இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு வேலைகள் மிச்சம் உள்ளன. 

பார்ட்டிக்கு இசையமைத்து தரும்படி யுவனை கேட்டிருக்கிறார் வெங்கட் பிரபு. படம் பார்ட்டி சம்பந்தப்பட்டது என்றவுடன் பிரேம்ஜியை இசையமைக்க சொல்லுங்கள் என எடுத்து கொடுத்திருக்கிறார் யுவன். அதை மனத்தில் ஏற்றி கொண்ட அண்ணன் வெங்கட்பிரபு தம்பியை தன் படத்திற்கு இசையமைக்க அனுமதித்திருக்கிறார்.


Advertisement


 

loading...

Advertisement

Advertisement

Advertisement