பாலியல் வன்கொடுமை செய்து திருநங்கை கொலை: 3 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மதுபோதையில் திருநங்கையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொன்ற வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

கிளாய் ஏரி அருகே கடந்த 17ஆம் தேதி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்றபோது அங்கு உடல் இல்லை. விசாரணையில், கிளாய் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், சின்னராஜ் என்ற திருநங்கையையும் நண்பர்கள் சிலரையும் மது அருந்த அழைத்துச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொன்றது தெரியவந்தது. கார்த்திக், சத்யா, பாலு‌ ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். தலைமறைவாகவுள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement