திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.சி பிரிவில் மாவட்டச் செயலாளராக உள்ள பரமானந்தம், திருவேற்காட்டில் வசித்து வருகிறார். இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பரமானந்தத்தின் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். மிகுந்த சத்தத்துடன் பெட்ரோல் குண்டு வெடித்ததில், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் படுக்கை அறை நாசமானது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கான நோக்கம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை திருவேற்காட்டில. பாஜக பிரமுகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு போடப்பட்டுள்ளது. திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் பரமானந்தம். இவர் பாஜகவில் எஸ்சி பிரிவில் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு தமது குடும்பத்தாருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, விடியற்காலையில் வீட்டின் மீது மர்ம நபர்கள் பொட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதில், படுக்கையறையின் ஜன்னல் கண்ணாடி உடைந்து, படுக்கையறையின் மெத்தை எரிந்தது. பாஜக கொடி கம்பத்தை சாய்த்த மர்ம நபர்கள் கொடியையையும் எரித்து சேதப்படுத்தினர். இதுகுறித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாஜக பிரமுகர் பரமானந்த்த்தை கொலை செய்யும் நோக்கோடு வந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி
இந்திய அணிதான் 'டார்கெட்'... மைக்கேல் வாகன் கக்குவது கருத்துகளா, அபத்தங்களா? - ஒரு பார்வை