டெல்லி, உத்தராகண்ட்டில் நிலநடுக்கம்..ரிக்டரில் 5.8 ஆக பதிவு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவானது.


Advertisement

டெல்லி, உத்தராகண்ட் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் நேற்றிரவு லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. 5.8 ஆக ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் பகுதியை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் அ‌திர்ந்ததால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மத்திய உள்துறை அமைச்சகம் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களை உத்தராகண்ட் மாநிலத்திற்கு அனுப்பியது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ பொருட்களுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement