குறுகிய கால நெல்விதைகளை வழங்க தஞ்சை விவசாயிகள் கோரிக்கை

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

சம்பா சாகுபடி மேற்கொள்ள பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாத நடுத்தர மற்றும் குறுகிய கால நெல்விதைகளை அரசு வழங்க வேண்டும் என தஞ்சை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Advertisement

கடந்த ஆறு ஆண்டுகளாக காவிரியில் உரிய நேரத்தில் தண்ணிர் திறக்ககாததால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. அதேபோல், கடந்த ஆண்டு சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்தும் பருவமழை பொய்த்து போனதால் செய்யப்பட்ட சம்பா சாகுபடி கருகி விவசாயிகள் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும்நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில், கடந்த பருவங்களில் மழை இல்லாமல் விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகி விதை நெல் கூட இல்லாமல் தவிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், தற்போது பெய்து வரும் மழையில் குறுகிய கால சாகுபடி மட்டுமே செய்ய முடியும் என்பதால் நடுத்தர ரகமான களிசல், சி.ஆர், ஆடுதுறை 37 போன்ற விதை நெல் ரகங்களை தொடக்க வேளாண்மை நிலையங்கள் மூலம் வழங்க, ‌அரசு ந‌வடிக்‌கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement