உயிரை பணயம் வைத்து ஆற்றைக் கடக்கும் பொதுமக்கள்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

உயிரை பணயம் வைத்து ஆற்றைக் கடந்து போய் வருகிறனர் புங்கனை புதூர் மக்கள்.


Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை புதூர் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் அபாயகரமான பயணத்தை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். புங்கனை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமம் வழியாக தென்பெண்ணை ஆறு ஓடுகிறது. அதனை கடந்துதான் தாமனேரி கிராமம் வழியாக தருமபுரி தலைமை மருத்துவமனை, மொரப்பூர் ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். ஊத்தங்கரை ஊராட்சிக்குட்பட்ட வீராட்சிக்குப்பம், புங்கனை புதூர், மண்ணாடிப்பட்டி, கோணப்பட்டி, நொச்சிபட்டி, மூங்கிலேரி, கீழ்குப்பம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான கிராம மக்களும் இந்த வழியாகதான் ஆற்றை கடந்து சென்று வருகின்றனர். 
மழைக் காலங்களில் தண்ணீரில் நடந்து சென்றுதான் மறு கரையை அடைய வேண்டியுள்ளது என ஆதங்கப்படும் இந்த மக்கள், புதூர் முதல் தாமனேரிப்பட்டி தென்பெண்ணை வரை அரசு குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement