[X] Close >

மெர்சல் தெலுங்கு டப்பிங் ஆரம்பமானது

Mersal-Telugu-dubbing-began

மெர்சல் தெலுங்கு டப்பிங் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளி வந்துள்ளது. 


Advertisement

தேனாண்டாள் மூவிஸ் தனது 100வது படைப்பாக வெளியிட்டுள்ள படம் மெர்சல். இதில் விஜய் மூன்று தோற்றங்களில் நடிக்கிறார். அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் இரண்டாவது படம் மெர்சல். இந்தக் கதையை அவர் தெறி படப்பிடிப்பின் போதே விஜய்க்கு விளக்கி சொல்லிவிட்டார். அதன் ஒன் லைன் பிடித்துப் போக மேலும் கதையை டெவலப் செய்யும் படி விஜய் கூறியிருந்தார். அதன்படி கதை மேம்படுத்த பாகுபலி கதையாசிரியரின் உதவியை நாடினார் அட்லீ.

ஏற்கெனவே விஜய்க்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. தெறி தெலுங்கில் போலீசோடு என டப் செய்யப்பட்டது. அதைபோலவே மெர்சலுக்கு தெலுங்கில் அத்ரிந்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. 


Advertisement

இந்நிலையில் விஜய் படப்பிடிப்பு வேலைகளை முடித்துவிட்டு பார்சிலோனா சென்றார். அவரது டப்பிங் வேலைகள் முடிவடைந்ததால் அவர் ஹாயாக ஆகாயத்தில் பறந்துவிட்டார். அடுத்தபடியாக சக நடிகர், நடிகைகளின் டப்பிங் இப்பொழுது தொடங்கியுள்ளது. டப்பிங் முடித்தவுடன் விஜய்யுடன் படக் குழு எடுத்து கொண்ட குரூப் போட்டோ இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close