பாஜக பெண்கள் கூட்டத்தில் அவர்கள் வெறும் டீதான் கொடுக்க வேண்டும், பிரச்னை எழுப்பினால் பிரச்னைதான் என அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பெனாசீர் அர்பான் கூறியுள்ளார்.
மியான்மரில் ராகினேவில் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையால் அவர்கள் அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். இந்த நிலையில் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக அசாம் மாநிலத்தை சேர்ந்த பாரதீய ஜனதாவின் பெண் தலைவர் பெனாசீர் அர்பான் பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டிருந்தார். ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பிரார்த்தனை நடத்தவும் அழைப்பு விடுத்திருந்தார். ஆகவே அவருக்கு வாட்ஸ் அப்பில் கட்சியின் தலையில் இருந்து, நீக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.
பெனாசீர் அர்பான் அசாம் பாரதிய ஜனதாவில் மிக முக்கியமான தலைவர். பொறியாளரான பெனாசீர் அர்பான் கடந்த 2015-ம் ஆண்டு வேலையில் இருந்து விலகி பாரதிய ஜனதாவில் இணைந்தார். பெனாசீர் அர்பான் முத்தலாக் பெற்றவர். கடந்த வருடம் ஜானியா தொகுதியில் போட்டியிட்டார்.
கட்சியின் அனுமதி பெறாமல் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் விவகாரத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டதற்காக ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கூடாது? என்ற கேள்வியுடன் அவருக்கு கட்சி தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் குறித்து தலைமைக்கு அவர் பதில் அனுப்பியதாகவும், பதில் ஏற்கப்படவில்லை.
இது குறித்து பெனாசீர் பேசுகையில், கடந்த வியாழன் அன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டேன், 4 நாட்கள் கழித்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டேன். என்னுடைய பதில் எதுவும் ஏற்கப்படவில்லை, விளக்கம் கூட எனக்கு வாட்ஸ்-அப்பில்தான் வந்தது. பாரதீய ஜனதாவில் உள்ள பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பெண்கள் கூட்டம் நடக்கும் போது டீ கொடுக்க வேண்டும். ஏதாவது பிரச்சனையை எழுப்பினால் தலைமையிடம் இருந்து பிரச்சனைதான் வரும். சிறுபான்மை பிரிவை சேர்ந்த கட்சியின் உண்மையான தலைவர்களும் பிரச்சனையை எழுப்ப அனுமதிப்பது கிடையாது. பாரதீய ஜனதா சிறுபான்மையினர் விவகாரத்தை பெரிதாக எடுத்து கொள்வதே கிடையாது" என்று கூறிள்ளார்.
Loading More post
“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!
அரசு பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்
"அதிகாரம், பண பலத்திற்கு முன்னால் யாராலும் தாக்கு பிடிக்க முடியாது" - ராகுல் காந்தி
தமிழக தேர்தல்: முடிவானது அதிமுக - பாமக தொகுதி பங்கீடு!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி