நடிகர் கார்த்தி கவுண்ட்டெளன் ஆரம்பம்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கார்த்தியின் ‘தீரன் அத்தியாயம் ஒன்று’ வெளியிடுவதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

காற்றுவெளியிடைக்குப் பிறகு கார்த்தி நடித்து வரும் படம் தீரன் அத்தியாயம் ஒன்று. இந்தப் படத்தை சதுரங்கவேட்டை வினோத் இயக்கி வருகிறார். அதில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  இப்படம் துப்பறியும் கதையைக் களமாக வைத்து உருவாகி வருகிறது. வழக்கம் போல காக்கிச்சட்டையில் களம் இறங்குகிறார் கார்த்தி. இதில் இவர் சீரியஸான காக்கிச்சட்டை இல்லை. காமெடி கலந்த காக்கிச்சட்டையாக வருகிறார்.

தமிழ் சினிமாவில் படம் எடுப்பது பெரிய விஷயமில்லை. ஆனால் அப்படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிடுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று கார்த்தி உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்கம் போராடி வருகிறது. அதன் முன்னோட்டத்தை கார்த்தி தன் படத்தில் இருந்தே தொடங்கியுள்ளார். அவரது தீரன் டீசர் எப்போது வரும்? ட்ரெயிலர் எப்போது வரும்? படம் எப்போது வெளியாகும் என்று தெளிவாக தேதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி படத்தின் டீசர் 27ம் தேதி வெளிவர உள்ளது. டிரெய்லர் அடுத்தமாதம் 17ம் தேதி வெளியாகிறது. படம் நவம்பர் 17ம் தேதி தமிழகம் எங்கும்  திரைக்கு வருகிறது. இதன் மூலம் கார்த்தியின் கவுண்ட்டவுன் இன்று முதல் தொடங்கியுள்ளது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement