நாடாளுமன்றத்தின் மக்களவை நெறிமுறை குழு தலைவராக, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான எல்.கே. அத்வானி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை நெறிமுறை குழு தலைவராக எல்.கே. அத்வானியை, சபாநாயகர் திருமதி சுமித்ரா மகாஜன் மீண்டும் நியமித்துள்ளார். அத்வானியுடன் மற்ற 14 உறுப்பினர்களும் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவை உறுப்பினர்கள் யாரேனும் நெறிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டால், அவர்கள் மீதான புகார்களை இந்த குழு ஆய்வு செய்து, அவர் மீதான நடவடிக்கைக்கு சபாநாயகருக்கு சிபாரிசு செய்யும். அதேபோல், தொகுதி மேம்பாட்டு நிதிக்குழுவின் தலைவராக துணை சபாநாயகர் தம்பிதுரை மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவின் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?