மகா புஷ்கர விழா - காவிரி நீர் இன்று மயிலாடுதுறை வந்தடைய வாய்ப்பு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மகா புஷ்கர விழாவை ஒட்டி மேட்டூரிலிருந்து திறக்கப்பட்ட நீர் நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு இன்று வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

காவிரி கரையோர பகுதிகளில் மகா புஷ்கர விழா கடந்த 12-ந் தேதி தொடங்கியது. வருகிற 24ஆம் தேதி வரை நடைபெற உள்ள மகா புஷ்கர விழாவில் காவிரி துலாக்கட்டத்தில் லட்சகணக்கானோர் புனித நீராடி வருகின்றனர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து நீராடிச் செல்கின்றனர்.

இந்நிலையில் காவிரி ஆற்றில் நீர் வந்ததை அடுத்து புனித நீராடுபவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என விழா ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயத்திற்கு தேவையான நேரத்தில் நீரை திறக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement