தோனியுடன் காதல் விவகாரம்: கடந்து செல்ல விரும்பும் ராய் லட்சுமி!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc


யார் இந்த தோனி? என கேள்விகேட்ட நடிகை ராய் லட்சுமி தற்போது அதற்கு விளக்கமளித்துள்ளார். தோனி விவகாரத்தைக் கடந்து செல்வதே நல்லது என்றும் கூறியுள்ளார்.


Advertisement

நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியுடன் முன்பு தனக்கு காதல் ஏற்பட்டதாக நடிகை ராய் லட்சுமி வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். தற்போது தோனிக்கு மற்றொரு பெண்ணுடன் திருமணம் முடிந்து குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வரை தோனியுடனான காதல் பற்றி நடிகை ராய் லட்சுமியிடம் அவ்வப்போது நிருபர்கள் கேள்வி எழுப்புவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். 


தற்போது அவர் நடித்துள்ள ஜூலி-2 பட ப்ரமோசனில் பிஸியாக இருக்கும் ராய் லட்சுமியிடம் மீண்டும் தோனி பற்றி கேள்வி எழுப்பினர். அப்போது கோபடைந்த ராய் லட்சுமி ‘யார் இந்த தோனி?’என எரிச்சலாக கேட்டார். அவரது இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. தோனி ரசிகர்கள் இதுகுறித்து ராய் லட்சுமியை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில், இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ராய் லட்சுமி, ‘இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இது எப்போதோ நடந்தது. தோனி திருமணம் முடிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இப்போது அதைப்பற்றி யோசிப்பது தேவையற்றது. அதைக் கடந்து செல்வதே நல்லது’எனத் தெரிவித்துள்ளார். 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement