நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், காவ்யா மாதவன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு வரும் திங்களன்று விசாரணைக்கு வருகிறது.
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவன், முன் ஜாமீன் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். காவ்யா மாதவன் சார்பில், நடிகர் திலீப் வழக்கில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராமன்பிள்ளை தாக்கல் செய்துள்ள மனுவில், நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகை காவ்யா மாதவனும் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் கோரப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுவை திங்கள் கிழமைக்கு விசாரிப்பதாகக் கூறி ஒத்திவைத்தார்.
நடிகை காரில் கட்டத்தி செல்லப்பட்டு பாலியன் வன்கொடுமைக்கு ஆளாக்கி, அதை வீடியோவும் எடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நடிகர் திலீப் 60 நாட்களுக்கும் மேலாக கொச்சி ஆலுவா கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த வழக்கில் நடிகர் திலீப்பின் இரண்டாவது மனைவியான நடிகை காவ்யா மாதவனுக்கும் தொடர்பிருப்பதாக கூறி, கேரள போலீஸ் ஏ.டி.ஜி.பி., சந்தியா தலைமையிலான குழுவினர் கடந்த சில மாதங்களுக்கு முன், காவ்யா மாதவனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
Loading More post
விவேக்கின் இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை - சிம்ஸ் மருத்துவமனை விளக்கம்
வேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் விறுவிறுப்பான மறு வாக்குப்பதிவு!
மேற்கு வங்கம் : தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு
5 முறை சிறந்த காமெடியன்; 3 முறை பிலிம்ஃபேர் : நகைச்சுவையில் முத்திரை பதித்த விவேக்!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்