ராம் ரஹீம் சிங்குக்கு உதவிய 4 போலீஸார் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

பாலியல் வழக்கில் கடந்த மாதம் 20 ஆண்டுகள்சிறை தண்டனை விதிக்கப்பட்ட "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் 
சிங். இவரை தப்பிக்கவைக்க முயற்சி செய்ததற்காக நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.


Advertisement

இந்த மூன்று காவலர்கள் ஹரியானா மாநிலத்தின் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்று காவல்துறை மூத்த அதிகாரி சாவ்லா பிபிசிக்கு தெரிவித்துள்ளார். குர்மீத் தப்பிச் செல்வதற்காக திட்டம் தீட்டியுள்ளார். இந்த ரகசியத் திட்டத்திற்கு 4 போலீஸாரும் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். 

15 ஆண்டு கால விசாரணை முடிவில் குர்மீத் ராம் ஹரீமை குற்றவாளி என்று ஹரியானாவின் பஞ்ச்குலாவில் உள்ள நீதிமன்றம் கடந்த மாதம் 
தீர்ப்பு அளித்திருந்தது. அதையொட்டி பல வன்முறை சம்பவங்கள் நடந்தன. பஞ்ச்குலா நகரத்தில் மட்டும் 38 பேர் உயிரிழந்தனர். இச்செய்தி 
உலகம் முழுவதும் தலைப்பு செய்தி பரவியது.


Advertisement

இப்பொழுது கைது செய்யப்பட்ட இந்த நான்கு போலீஸாரும் குர்மீத் ராம்ரஹீம் சிங்கின் பாதுகாவலர்களாக அரசால் நியமிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்க செய்தியாகும். 

ஆனால், உள்ளூர் ஊடகங்கள், இந்த நான்கு பேரும் குர்மீத்தின் பக்தர்களாக நாளடைவில் மாறிவிட்டானர் என்று குறிப்பிட்டு வருகின்றன.
தீர்ப்பளிக்கப்பட்ட அன்று குர்மீத்துக்கு பாதுகாவலாக இந்த நான்கு காவலர்கள்தான் நீதிமன்றத்துக்கு உடன் வந்திருந்தார்கள் என்ற தகவலும் 
வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement