[X] Close >

ஹெல்மெட் அணியாத சரக்கு வாகன ஓட்டுநருக்கு அபராதம்

Fine-for-not-wearing-Helmet

சரக்கு வாகன ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என காவல் உதவி ஆய்வாளர் அபராதம் விதித்த விநோத சம்பவம் கோவையில் அரங்கேறியுள்ளது.


Advertisement

கோவை மாவட்டம் காருண்யா நகர் காவல் நிலையத்தை சேர்ந்த உதவி ஆய்வாளர் சிவசங்கரன். இவர் கடந்த 13-‌ம் தேதி அதே பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவ்வழியாக சரக்கு வாகனத்தில் சென்ற ஓட்டுநர் கர்ணன்‌ சீருடை அணியவில்லை என சிவசங்கரன் கேட்டுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


Advertisement

இந்நிலையில், சரக்கு ஆ‌ட்டோ ஓட்டுநர் ஹெல்மெட் அணியவில்லை என காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளார். சரக்கு வாகன ஓட்டுநருக்கு ஹெல்மெட் அணியவில்லை எனக் கூறி அபராதம் விதித்திருப்பது பல விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கேட்டபோது, இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close