பெண்ணைக் கொன்று மீன் வலைக்குள் நகைகளை பதுக்கியவர் கைது!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

நகைக்காக வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement

சென்னை, திருவல்லிக்கேணி பழனியம்மாள் தெருவில் வசித்துவந்த கலா என்பவர் கடந்த 8ம் தேதி அவரது வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். பின்னர் அவர் அணிந்திருந்த நகை மற்றும் வீட்டில் இருந்த 40 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். 
மீனவரான பன்னீர்செல்வம், கலா குடியிருக்கும் பகுதியில்தான் வசித்து வந்துள்ளார். கலாவிற்கும் பன்னீர் செல்வத்திற்கும் பழக்கம் இருந்ததாகவும் தனியாக இருந்த நேரம் பார்த்து நகைகளை கொள்ளையடிக்க பன்னீர், கலா வீட்டிற்குள் நுழைந்ததாகவும், இதைக் கண்ட கலா, கூச்சலிட முயன்றதாகவும், ஆத்திரமடைந்த பன்னீர், மூட்டை தூக்கும் ஆயுதத்தால் கலாவை கொன்றுவிட்டு நகைகளை கொள்ளையடித்து தப்பியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து பன்னீர்செல்வம் அவர் வீட்டிலுள்ள மீன் வலையில் பதுக்கி வைத்திருந்த 40 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான பன்னீர்செல்வத்தை போலீசார் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். 
 


Advertisement

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement