அஜித்துக்கு வில்லனாக நடித்ததால் அருண் விஜயின் 25வது படத்தை இயக்கும் கெளதம் மேனன்?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அருண் விஜயின் 25வது படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 


Advertisement

கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய். அதற்காக அஜித் ரசிகர்கள் அவரை வெகுவாக பாராட்டினர். அப்போது, அருண் விஜய் படத்தை நிச்சயம் இயக்குவேன் என கெளதம் மேனன் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் அருண் விஜயின் 25வது படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது த்ரில்லர் கலந்த காதல் திரைப்படம் எனவும் கூறப்படுகிறது. அருன் விஜய் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்திலும் அருண் விஜய் வில்லனாக நடித்து வருகிறார். தற்போது விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பை துருக்கியில் நடத்தி வருகிறார் கெளதம் மேனன். இந்தப்படங்களை முடித்த பிறகு அருன் விஜயின் 25வது படத்தை கெளதம் மேனன் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

loading...

Advertisement

Advertisement

Advertisement