சந்தேகத்தால் மனைவியை கொன்ற கணவன்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவர் மீது கோபம் அடைந்த கணவன் கொடூரமாக கொலை செய்துள்ளார்.


Advertisement

திருவாரூர் மன்னார்குடி அருகே உள்ள வடுவூரைச் சேர்ந்தவர் உலகநிதி. கட்டுமானத் தொழிலாளியான இவர், முனீஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 19 மற்றும் 9 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் உலகநிதிக்கு சந்தேகம் ஏற்பட்டதால், முனீஸ்வரிக்கும் அவருக்கும் தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் குழந்தைகள் பள்ளிக்குச்சென்ற நிலையில், கணவன் மனைவி இடையேயான சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த உலகநிதி மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்து கை, கால்களையும் தனித்தனியாக வெட்டியுள்ளார். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு சென்ற அவர், குழந்தைகள் வீடு திரும்பியதும் முனீஸ்வரி வெளியூர் சென்றுவிட்டதாக கூறியிருக்கிறார். பின்னர் உலகநிதியே மனைவியை கொன்றதை ‌ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை போலீஸார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  
 

வீடியோ

loading...

Advertisement

Advertisement

Advertisement