புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவிகள் கயிறு தாண்டுதலில் நிமிடத்திற்கு 360 முறை தாண்டி புதிய கின்னஸ் சாதனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியை அடுத்த கல்மண்டபம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் 14 பேர் ஒரே நேரத்தில், நிமிடத்திற்கு 360 முறை கயிற்றினை தாண்டி புதிய கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். மாணவிகள் செய்த சாதனை நிகழ்வானது மாணவர்கள் மத்தியில் வியக்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. இந்த சாதனை நிகழ்வினை பதிவு செய்து அரசு பள்ளி சார்பில், கின்னஸ் நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாணவிகள் கூறும்போது, தங்களுடைய 3 மாத கடின உழைப்பில் இத்தகைய சாதனை முயற்சியை செய்ததாகவும், தங்களுடைய புதிய வகையிலான சாதனையை கின்னஸ் நிர்வாகம் அங்கீகரிக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர். இதுபோன்ற பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தோடு வாழவும் படிப்பில் கவனமும் செலுத்தவும் ஏதுவாக உள்ளதாக மாணவிகள் தெரிவித்தனர்.
Loading More post
சென்னையில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை - மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழகத்தை குளிர்வித்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மழை
தமிழ் புத்தாண்டையொட்டி சென்னை வடபழனி முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு!
மகாராஷ்டிராவில் இன்று முதல் 15 நாட்கள் மக்கள் ஊரடங்கு
ஐபிஎல் தொடரிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் பென் ஸ்டோக்ஸ் விலகல்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!