செம்மரங்கள் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 5 பேர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறி தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உள்பட ஏழு பேரை ஆந்திர மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


Advertisement

ஆந்திரா மாநிலம் பாகாலா காவல் நிலைய போலீசார் நென்ரகுண்டா என்ற பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக‌ வந்த ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள், அங்கு போலீசாரைப் பார்த்ததும் அவர்கள் மீது கற்களை வீசி தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 5 பேரையும், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரையும் துப்பாகி முனையில் கைது செய்ததாகப் போலீசார் தெரிவித்தனர். அவர்களிடமிருந்து‌ 68 கிலோ எடையுள்ள 2 செம்மரங்கள், ஒரு ஆட்டோ மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement