புலி பயமுறுத்தியதால் 12 குரங்குகள் மாரடைப்பால் மரணம்!

uttar-pradesh-12-monkeys-succumb-to-heart-attacks-after-beings-scared-by-tiger

உத்தரப்பிரதேச காட்டுப்பகுதியில் திடீரென புலி பயமுறுத்தியதால் 12 குரங்குகள் மாரடைப்பால் மரணமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


Advertisement

உத்தரப்பிரதேச காட்டுப்பகுதியில் 12 குரங்குகள் கூட்டமாக இறந்து கிடந்தன. இறந்த குரங்குகளை ஆய்வு செய்த கால்நடை மருத்துவர்கள், அனைத்து குரங்குகளுக்கும் தொடர் மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளன என்று கூறினர்.

புலிகள் அவ்வப்போது உலவும் அப்பகுதியில், புலியின் உருமல் சத்தத்தைக் கேட்டு குரங்குகள் இறந்திருக்கலாம் என்று வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். அனைத்து குரங்குகளுக்கும் ஒரே நேரத்தில் தொடர் மாரடைப்பு ஏற்பட புலியே காரணமாக கூறப்பட்டாலும், இப்படி நடக்க சாத்தியம் உண்டா என்ற கேள்வியும் வனத்துறையினரிடையே எழுந்துள்ளது.


Advertisement

பிரபல கால்நடை மருத்துவரான பிரிஜேந்திர சிங் கூறும் போது, வனவிலங்குகளுக்கு இதுபோல நடக்க வாய்ப்பில்லை. புலி வருவதும், போவதும் காட்டுப் பகுதியில் இயல்பு. புலியைக் கண்டு பயந்து குரங்குகள் மரணமடைந்தது என்பது உண்மையான கூற்றாக இருக்க வாய்ப்பில்லை. அந்தக் குரங்குகள் எதாவது தொற்று நோயால் இறந்திருக்கலாம் என்று கூறினார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement