பாலியல் வன்கொடுமை புகார்: பாஜக பிரமுகர் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

மும்பையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய புகாரில் பாரதிய ஜனதா பிரமுகர், தயா கெய்க்வாட் என்பவர் கைது செய்யப்பட்டார். 


Advertisement

தானேவை சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமானவர் பாஜக பிரமுகர் தயா கெய்க்வாட். நட்பாக தொடங்கியது இவர்கள் பழக்கம். பிறகு கெய்க்வாட், அவரை திருமணம் செய்துகொள்வதாகக் கூறினார். இதை நம்பிய அந்தப் பெண், அவர் அழைத்தபடி, அஸ்வினி துமல் என்பவர் வீட்டுக்கு சென்றார். அங்கு அந்தப் பெண்ணை, கெய்க்வாட் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். 
இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இன்று தயா கெய்க்வாட்டை கைது செய்தனர்.

loading...

Advertisement

Advertisement

Advertisement